கொள்கை ஆவணங்கள்

மாநிலத் திட்டக் குழு ஓர் அறிமுகம்

மாநிலத் திட்டக் குழு,  தமிழக அரசின் உச்ச ஆலோசனைக் குழுவாக செயல்படுகிறது.   மாநிலத்திற்குள் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஆதார அடிப்படையிலான கொள்கை வழிகாட்டுதலை வழங்குவதே இதன் முதன்மைப் பணியாகும். மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமூக நலன் மற்றும் புதுமை ஆகியவற்றில் குறிப்பிட்டகவனம் செலுத்தி , கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த  ஆணையம் அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை மதிப்பீடு செய்து கண்காணிக்கிறது. இது மற்ற அரசுத் துறைகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, அறிவுப் பகிர்வை அளித்து, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சிகளை செய்ய வழிவகை செய்கிறது.

குழுமம்

வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமம்

மாநிலத் திட்டக் குழுவின் வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமத்திற்கு, மண் வளம், நீர் வளம், பாசனம், மண் ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டல் முதலியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான விவசாயத் திட்டத்தை உருவாக்க ஆலோசனை வழங்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து

தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து குழுமம், புதுமையான கொள்கை உருவாக்கம் மற்றும் துறைசார் நடவடிக்கைகள் மூலமாக, தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் விரிவான வளர்ச்சியை உந்துகிறது. இது தொழில், எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறைசார் பிரிவுகளின் (குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்...

நிலப்பயன்பாட்டுப் பிரிவு

மாநிலத் திட்டக்குழுவின் நிலப் பயன்பாட்டுப் பிரிவின் முக்கிய நோக்கமானது, நிலத்தை விவேகமாகப் பயன்படுத்துதல், தற்போதைய நிலப் பயன்பாடு, நில வளங்கள் மற்றும் நிலச் சீரழிவு பற்றிய நுண்ணிய அளவிலான தரவுகளைச் சேகரித்தல் மேலும் மிகவும் திறமையான நிலப்பயன்பாடு குறித்த கொள்கை முடிவுகளை உருவாக்குதல், இயற்கை வளங்களை மேம்படுத்துதல் போன்றவையாகும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

ஒவ்வொரு தனிநபர்களும் அவர்களது அதிகபட்ச திறனை அடைந்திடவும், மேலும், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்ககாக அவர்களது பங்களிப்பை வளர்த்தெடுத்திடவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுமம் தனது முயற்சிகளை மேற்கொள்கிறது. உலகத்தரத்திலான கல்வி, குழந்தை பருவத்திலிருந்து வாலிபப் பருவம் வரையிலும் அவர்களுக்கு தேவைப்படும் தடையற்ற மாற்றங்கள் மற்றும் மாநிலத்தில் தரமான...

சுகாதாரம் மற்றும் சமூக நலக் குழுமம்

மாநில திட்டக்குழுவில் உள்ள சுகாதாரம் மற்றும் சமூக நலக் குழுமம் தமிழ்நாட்டு மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முழுமையாக உறுதி பூண்டுள்ளது. இந்த கொள்கையின்படி பொதுச் சுகாதாரம், குடும்ப நலம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஊட்டச்சத்து, சமூக மற்றும் பொருளாதார...

ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடல் குழுமம்

ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடல் குழுமம் ஊரகப் பகுதிகளில், வளர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. மேலும், ஊரகப் பகுதிகளின் பொருளாதார நிலை, நடப்பில் உள்ள ஊரக வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத்திட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில்..

திட்ட ஒருங்கிணைப்பு குழுமம்

திட்ட ஒருங்கிணைப்பு குழுமம், இந்திய அரசின் நித்தி ஆயோக், தமிழ்நாடு அரசின் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையுடன் மாநிலத் திட்டக் குழுவினை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு இணைப்பு பாலமாக செயல்படுகிறது தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தினை சீரான முறையில் செயல்படுத்துதல் திட்ட ஒருங்கிணைப்பு குழுவின்...

நிர்வாகம்

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்பான நிர்வாக பணிகளைமேற்பார்வையிடும் முக்கிய பிரிவாக நிர்வாகபிரிவு செயல்படுகிறது. மாநிலத் திட்டக் குழுவின் பன்முகப் பொறுப்புகள்,பணிகள் மற்றும் கடமைகளை உள்ளடக்கியது.

மாநில திட்டக்குழு தொடர்பான செய்திகள்

இல்லம் தேடி கல்வி கற்றலை மிகவும் வேடிக்கையாக ஆக்குகிறது, ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேம்படுத்துகிறது, அரசாங்கத்தைக் கண்டறிகிறது. படிப்பு
– தி இந்து, 12 பிப்ரவரி 2023

 

தமிழகத்தில் பிராந்திய ஏற்றத்தாழ்வு. பொருளாதார வளர்ச்சி குறைந்த அளவு: அறிக்கை
– தி இந்து, 12 பிப்ரவரி 2023

 

3 மாவட்டங்களில் பெண் இலவச அடிப்படை பயணத்தின் காரணமாக ஒரு மாதத்திற்கு சராசரியாக 888 ரூபாய், டி.என். திட்டக்குழு ஆய்வு. – தி இந்து, 12 பிப்ரவரி 2023
– தி இந்து, 12 பிப்ரவரி 2023

 

மாநில திட்டக்குழு கொள்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது
– தி இந்து, 12 பிப்ரவரி 2023

 

‘பெண்களுக்கான இலவச பஸ் பயணம் இலவசம் அல்ல, புரட்சி’- (மாண்புமிகு முதலமைச்சர் மாநில திட்டக்குழு 3வது கூட்டத்தில் பேச்சு)
– தி இந்து, 12 பிப்ரவரி 2023

 

இல்லம் தேடி கல்வி கற்றலை மிகவும் வேடிக்கையாக ஆக்குகிறது, ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேம்படுத்துகிறது, அரசாங்கத்தைக் கண்டறிகிறது. படிப்பு
– தி இந்து, 12 பிப்ரவரி 2023

 

தமிழகத்தில் பிராந்திய ஏற்றத்தாழ்வு. பொருளாதார வளர்ச்சி குறைந்த அளவு: அறிக்கை

– தி இந்து, 12 பிப்ரவரி 2023